திருமணம் செய்யாமல் தாயான பிரபல நடிகை.. குழந்தையை தவிக்க விட்டு புது காதலனுடன் ஊர்வலம் : இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 4:08 pm
Amy 1 - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த நடிகை முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு படம் பெரிய ஹிட் கொடுத்தது. டைட்டானிக் ரேஞ்சில் அந்த படம் பிரபலமாக பேசப்பட்டது.

அந்த படத்திற்கு பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். பிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் நடித்த போது, உடன் நடித்த நடிகருடன் கிசுகிசுக்கள் ஏற்பட்டது. ஆனால் அந்த படத்தில் உண்மையில் அந்த நடிகை சூப்பராக நடித்திருப்பார்.

பொதுவாக வெளிநாட்டு, வெளிமாநில நடிகைகள் குறிப்பாக வடமாநில நடிகைகள் தமிழ் உச்சரிப்பை பேசுவது எளிது கிடையாது. ஆனால் இந்த வெளிநாட்டு நடிகை பிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் வாயசைவை செமயாக செய்து நடித்துள்ளார் என்று பேசப்பட்டது.

அதன் பிறகு ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த அவர், தனது பாய்பிரண்டுடன் ஊர் ஊராக சுற்றினார். விளைவு சீக்கிரம் கர்ப்பமானார். பின்னர் நிச்சயதார்த்தம் செய்த அந்த ஜோடிக்கு, திருமணம் ஆவதற்கு முன் குழந்தையை பெற்றெடுத்தார்.

சினிமாவில் இருந்து வெளியேறிய அவர் குழந்தையை கவனிப்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் திருமணம் செய்யவில்லை. தற்போது குழந்தை பெரியவனாக வளர்ந்து விட்டதால், தனது தாயிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, சினிமாவில் நடிக்க ஆயத்தமானார்.
இதனால் குழந்தை ஏக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இவரது காதலன் கைவிட, தற்போது புது காதலருடன் ஊர் சுற்றி வருகிறார். எது எப்படியோ இந்த காதலாவது கல்யாணம் வரைக்கு போகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 332

0

1