ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணிபுரிந்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் மிர்ர்ச்சி செந்தில். அதன் மூலம் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியல் நடிகராக இடம் பிடித்தார்.
அதன் பின்னர் தவமாய் தவமிருந்து, மாப்பிள்ளை, பப்பாளி, வெண்நிலா வீடு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவையே காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில், தன் மனைவி சரியில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவளை நான் சீரியலில் நடித்தது போன்றே நிஜ வாழ்க்கையிலும் இருப்பாள் என நம்பி ஏமாந்துவிட்டேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவளது கேரக்டர் வேறு அவளுக்கு பிடித்தது மட்டும் தான் செய்யவேண்டும் என அடம்பிடிப்பாள் வீட்டில் எதுவாக இருந்தாலும் அவள் நினைப்பது போலவே தான் நடந்துக்கொள்ளவேண்டும். அவர் ரொம்ப ஸ்டிரிட்டாக நடந்துக்கொள்வதோடு பல இடங்களில் ஈகோ ஆரம்பித்து சண்டையில் கூட முடிந்ததது என கூறியிருந்தார்.
இதனால் இவர்கள் விவாகரத்து செய்யபோகிறார்களா? என ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வையில் தற்போது செந்தில் – ஸ்ரீஜா தம்பதி இருவரும் இணைந்து தன் மகனின் அழகான போட்டோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.