ஹோட்டல் அறையில் விழுந்து கிடந்த பிரபல பின்னணி பாடகி : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2023, 4:33 pm
Bombay Jayashri - Updatenews360
Quick Share

பிரபல பின்னணி பாடகி சுயநினைவின்றி ஹோட்டல் அறையில் விழுந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா என்ற பாடலை பாடியதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அதை தொடர்ந்து ஏராளமான ஹிட்பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களின் இசையில் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் தொடர்ந்து பாடி வந்தார். அதேபோல் வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றம் பாடல்களைப் பாடுவார். அந்த வகையில் லண்டனில் நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார். அதில் அவரின் தலை பகுதியில் பலத்த அடிப்பட்டுள்ளது. இதையடுத்து சுயநினைவை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Views: - 95

0

0