பிரபல தொலைக்காட்சி நடிகர் திடீர் மரணம் : ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது மாரடைப்பு… திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி!!

பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் உடனடியாக அவரை கோகிலாபென் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய சித்தாந்த் வீர் சூர்யவன்சி, ‘குசும்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ‘கசௌதி ஜிந்தகி கே’, சுபியானா இஷ்க் மேரா, ஜித்தி தில் மானே நா மற்றும் வாரிஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

ஈரா சௌத்ரி என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்ட சித்தாந்த், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு மாடல் அழகியான அலெசியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சியின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

11 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

12 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

13 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

14 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.