தமிழ் சினிமாவில் தனது திறமையால் வளர்ந்து வந்து உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் ஆரம்ப காலத்தில் தன்னுடைய கடின உழைப்பால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்து பல வெற்றிப்படங்களை குவித்து,ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடக்கத்தில் காமெடி கலந்த குடும்ப படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த அவர்,காலப்போக்கில் பல ஆக்ஷன் படங்களிலும் நடித்து தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அந்த வகையில் அவருடைய நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி அன்று வெளிவந்த அமரன் திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கை மட்டுமின்றி,தமிழ் சினிமாவிலும் ஒரு பெரிய மைல்கல்லை பதித்தது.இந்த படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி பிஸியாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானுறு படத்தின் தலைப்பை 1965-னு மாற்றியுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,பட ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் சிவகார்த்திகேயன் நடந்து கொண்ட விதத்தை பற்றி பிரபல யூடியூப் பேச்சாளரான பிஸ்மி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: படத்தால் நடந்த விபரீதம்…”கேம் சேஞ்சர்”பட நாயகி மருத்துவமனையில் திடீர் அனுமதி..!திடீர்
அதாவது படப்பிடிப்பு தளத்தில் நடிகர்,நடிகை,இயக்குனர் கேரவன்கள் வரிசையாக தான் இருக்கும்,ஆனால் சிவகார்த்திகேயன் கேரவன் மட்டும் தனியாக நிறுத்தப்பட்டு அதற்கு பக்கத்தில் ஒரு அலுவலகத்தையே போட்டுள்ளார்,இது படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகரான ஜெயம் ரவி அவர் அமைதியாக அவருடைய காட்சியில் நடித்து முடித்து கேரவன் செல்கிறார்,ஆனால் சிவகார்த்திகேயன் அடக்கி வாசிக்காமல் ஆட்டம் போட்டுகொண்டு இருக்கிறார் என பகிரங்கமாக பிஸ்மி பேசியுள்ளார்.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடும் அதிருப்த்தியில் உள்ளனர்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.