வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.
பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, அடுத்தடுத்து, பத்து தல, அகிலன், ருத்ரன், டிமான்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். இந்நிலையில், திடீரென பிரியா பவானி ஷங்கர் தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், பிரியாபாவனி சங்கர் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். சில சீரியல்களிலும் நடித்துள்ள இவர், ஆபாசமான கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை, குடும்ப பாங்கான ரோல்களில் தான் நடித்து வருகிறார்.
இதனால் எதார்த்தமாக தனது காதலரையும் அறிமுகப்படுத்தினார். தனது புது பங்களாவில் காதலருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனால், பிரியா பாவனி சங்கருக்கும் அவரது காதலுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த மன அழுத்தத்தில் இருந்த பிரியா, தனது நெருங்கிய தோழிகளிடம், என் காதலர் என்னை ஏமாற்றி விட்டார், நான் நினைத்த மாதிரி அவர் இல்லை என்று புலம்பி இருக்கிறார்.
சினிமாவில் நடிக்க வந்துவிட்டாலே, நடிகர்களுடன் நெருங்கி நடிக்க வேண்டும், வெளியூரில் படப்பிடிப்புக்காக பல நாட்கள் அங்கேயே தங்கி இருக்க வேண்டும் இது எல்லாம் தேவையில்லை என்று நினைத்த பிரியா பவானி சங்கரின் காதலன், திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகும்படி காதலன் கூறியுள்ளார். ஆனால் பிரியா பாவனி சங்கர் திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.
இந்நிலையில், ப்ரியா பவானிசங்கரும், ராஜ்வேலும் பிரியவில்லை என ரசிகர்கள் அடித்துச் சொல்கிறார்கள். இதற்கு காரணம் ப்ரியா பவானிசங்கர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ தான்.
ப்ரியாவுக்கும் சரி, ராஜ்வேலுக்கும் சரி டிராவல் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். அடிக்கடி வெளிநாடுகளுக்கு இருவரும் கிளம்பிவிடுவார்கள். அப்படி அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் ப்ரியா பவானிசங்கர். இதனிடையே, பயணம் செய்ய விரும்பும் ஜோடியான இவர்கள் தங்கள் வீட்டு சுவரை அலங்கரிக்க வாங்கிய பொருள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.