சித்துவுடன் ஒரு நினைவலைகள் : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோவை பார்த்து கதறிய ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2021, 4:41 pm
VJ Chitra- Updatenews360
Quick Share

சீரியல்களில் நடிப்பவர்கள் அவ்வளவு எளிதாக மக்களை கவருவது கஷ்டம். ஆனால் மக்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டிருந்தவர் சித்து என்கிற சித்ரா. ஆரம்பதில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த விஜே சித்ரா பின்னர் சன்டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்தார்.

VJ Chitra dead

பின்னர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில், தொடர்களின் நடித்திருந்தாலும் பெயர் வாங்கி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அதில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

Police arrest VJ Chithra's husband Hemnath in connection with the actor's  death | The News Minute

கதிர் முல்லை ஜோடியை ரசிகர்கள் வரவேற்றனர். பின்னர் சின்னத்திரையில் நடித்த போதே வெள்ளித்திரை வாய்ப்பும் வந்தது. சுபாஷ் இயக்கத்தில் கால்ஸ் என்ற திரைப்படத்தல் நடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள சித்து இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்களை போட்டு லைக்ஸ்களை அள்ளுவார்.

VJ Chitra Death Case: Husband Hemanth Kumar Granted Conditional Bail -  Filmibeat

இதனிடையே தான், சித்ரா ஹேம்நாத் என்பவர் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து திருமணம் நடக்கு நிலையில் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.

Death mystery deepens , Chitra husband arrested, her relatives seek proper  postmortem - Splco Voice of Democracy

இவரது மரணம் சின்னத்திரை மட்டுமல்லாமல் திரை உலகினரையும் உலுக்கியது. சித்ராவின் மரண ஓலையை கேட்டு ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர். இதில் கொடுமை என்னவென்றால் சித்ரா நடித்த முதல் படமே இவர் மரணத்திற்கு பின் வெளியானது.

இந்த நிலையில் இவர் மரணமடைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகள் சித்ராவுடைய போட்டோவை போட்டு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா, சித்ரா உடன் எடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு, ”ஒரு வருசம் இல்லை எத்தனை வருடங்கள் ஆனாலும் யாரும் உன்னை மறக்கமுடியாத அளவிற்கு அன்பையும் நினைவுகளையும் விட்டு சென்றிருக்கிறாய் …என்றும் நினைவுகளுடன்” என பதிவிட்டுள்ளார்.

Views: - 217

1

0