Father’s Day – முன்னிட்டு அப்பாவுக்கு சாப்பாடு ஊட்டி மகிழ்ந்த குக் வித் கோமாளி புகழ்..!

Author: Udhayakumar Raman
20 June 2021, 7:04 pm
Quick Share

விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. அந்த வகையில் திவ்யதர்ஷினி, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா, மைனா நந்தினி, இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மிக பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா 2 பேருமே கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். இப்போது புகழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

இன்று தந்தையர் தினம் என்பதால், இணையமே தந்தையர் தின வாழ்த்துக்களால் நிரம்பி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளுமே தனது தந்தையை இழுத்து ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி புகழும் தந்தையர் தினத்தை முன்னிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் அப்பாவிற்கு ஊட்டி விடுவது போல புகைப்படத்தை வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் ரசிகர்கள் அவரது புகைப்படத்திற்கு ஹார்ட்டுகளை விட்டு வருகின்றனர்.

Views: - 239

27

1