கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் ஏ ஆர் ரஹ்மான் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் கான்செர்ட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் மழை காரணமாக அந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பத்தாயிரம் ரூபாயில் இருந்து லட்சம் ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
ஆனால் இந்நிகழ்ச்சி நடைபெற்ற அன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக டிக்கெட் எடுத்த பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. பலரும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர். பல ஊர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இந்நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் ஏமாந்துப்போனார்கள். லட்ச ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிய பலர் இந்நிகழ்ச்சியை காணமுடியாததால் கடும் எரிச்சல் அடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய பல பேர் வெளியே நிறுத்தப்பட்டதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
“மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சிக்கான மொத்த ஏற்பாட்டிற்கான பொறுப்பை ஏசிடிசி என்ற Event Management நிறுவனத்திற்கு அளித்திருந்தார் ஏ ஆர் ரஹ்மான். இந்நிறுவனத்தின் கவனக்குறைவு காரணமாகவே இந்த குளறுபடிகள் ஏற்பட்டதாக ஏ ஆர் ரஹ்மான் கூறினார். மேலும் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ரஹ்மான், இந்நிகழ்ச்சியை காண முடியாதவர்கள் தங்களது குறைகளை டிக்கெட் பிரதியுடன் மெயில் ஐடி ஒன்றுக்கு அனுப்புமாறு கோரிக்கையும் வைத்திருந்தார்.
இந்த நிலையில் அர்ஜூன் என்ற ஒருவர் 10 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தும் போக்குவரத்து நெரிசலால் இந்நிகழ்ச்சியை காணமுடியவில்லை, ஆதலால் ஏசிடிசி நிறுவனம் தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த ஆணையம் அர்ஜூனுக்கு ரூ50,000 இழப்பீடு வழங்க தற்போது உத்தரவிட்டுள்ளது. “மறக்குமா நெஞ்சம்” என்று இந்நிகழ்ச்சிக்கு பெயர் வைத்திருந்த நிலையில், “மறக்க முடியாதபடி மன்னிட்டீங்களா பெரிய பாய்” என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பியது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.