சின்னத்திரையில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ரோபோ சங்கர், தனது தனித்துவமான உடல்மொழி, நகைச்சுவை உணர்வு, ஆற்றல்மிக்க நடிப்பால் விரைவில் சினிமா உலகிலும் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலையில் இருந்து குணமடைந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்த செய்தி திரையுலகையே மட்டுமல்ல, ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரோபோ சங்கர், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். “கமல்சாருடன் குறைந்தது ஒரு படத்தில் கூட நடிக்க வேண்டும்” என்பது அவரின் நீண்டநாள் கனவாக இருந்தது. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது.
46 வயதிலேயே ரோபோ சங்கரின் மறைவு, தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அவரது இறுதிச்சடங்கில் சண்டை பயிற்சியாளர் ஒருவர் பணமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் உருக்கமாகக் கூறியதாவது:
“ரோபோ சங்கர் அண்ணன் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர். அவரை இழந்ததால் எங்கள் 350 பேர் கொண்ட குழுவே இன்று தலைமை இழந்தது போல உணர்கிறோம். எப்போதும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். ‘நாம் இறந்தால் ஆயிரம் பேர் வருவார்கள், ஆனால் பணம் வராது’ என்று சொல்வார். அதனால்தான் இன்று அவருக்கு பணமாலை அணிவித்து நாங்கள் அஞ்சலி செலுத்தினோம்.”
ரோபோ சங்கரின் மரணம், சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.