நிதி நெருக்கடியில் ஏ வி எம்; 13 நாள் கால்ஷீட் கொடுத்து காப்பாற்றிய முன்னணி நடிகர்;
Author: Sudha20 July 2024, 3:48 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80 கால கட்டத்தில் நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். ஒரு நாளைக்கு 5 திரைப்படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமான படத் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் எதிர்பாராத நிதி நெருக்கடியில் சிக்கியது.
அதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் ஏவிஎம் நிறுவனத்திற்கு சென்று உங்களுக்காக ஒரு படம் நடிக்கிறேன். ஆனால் என்னிடம் 13 நாள் கால்ஷீட் மட்டுமே உள்ளது.அதற்குள் ஒரு படம் எடுத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டிருக்கிறார். இதைவிட வேறு வரப்பிரசாதம் என்ன உள்ளது என்று சொன்ன ஏவிஎம் நிறுவனம் ரஜினியின் ஆஸ்தான இயக்குனரான எஸ்பி முத்துராமனை அழைத்து ரஜினி காந்த்தை ஹீரோவாக வைத்து திரைப்படம் இயக்கிக் தரக் கேட்டனர்.
அப்படி உருவான திரைப்படம் தான் ரஜினி மற்றும் குழந்தைகள் பலர் நடிக்க உருவான ராஜா சின்ன ரோஜா திரைப்படம்.ராஜா சின்ன ரோஜா மிக்கபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.இதன்மூலம் ஏவிஎம் நிறுவனத்தின் நிதி பிரச்சினைகள் தீர்ந்ததாக சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.