நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் பிரசாந்த் கார் ஓட்டிக்கொண்டே பேட்டி அளித்த காட்சிகள் சமீபத்தில் வெளியானது.
மேலும், நகைக்கடை திறப்பு விழா மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தது என ஃபுல் ஃபார்மில் வந்து அடிக்கடி ரசிகர்களுக்கு காட்சி தந்து வருகிறார் பிரசாந்த். காரில் பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த் தற்போது, பைக் ஓட்டிக்கொண்டே பேட்டி கொடுத்த புதிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது.
தனது அப்பா சிறுவயதில், ஆர்எக்ஸ் 100 பைக் வாங்கி கொடுத்தார் என்றும், நான்கு நாட்களில் பைக் ஓட்ட கற்றுக் கொண்டேன் என்றதும் அதை உடனே விற்று விட்டார் என்பது முதல் முதலில் பைக் ஓட்டிய அனுபவங்களை அந்த பேட்டியில் ஷேர் செய்திருந்தார்.
பைக்கில் அனைவருக்கும் ஹாய் என்று சொல்லிக் கொண்டே செல்வதை பார்த்த நெட்டிசன்கள் ஹெல்மெட் அணியாமல் இப்படி பைக் ஓட்டலாமா பிரஷாந்த் என்று கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் சிலர் சோசியல் மீடியாவில் பிரசாந்த்தின் இந்த பைக் வீடியோ பேட்டிக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் என்ன கேள்வி கேட்க முயன்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய பிரசாந்த் நீங்கள் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்பது தெரியும். ஆனால், அதற்கு ஏற்ப தயாராகி வந்துள்ளேன்.
தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டுகளாக ஹெல்மெட் விழிப்புணர்வு நிறைய செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் இலவச ஹெல்மெட் கொடுத்துள்ளேன். நீங்களும் அதனை செய்திகளாக வெளியிட்டீர்கள். ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த சம்பவம் மூலம் எனக்கு இன்னொரு பிளாட்பார்ம் கிடைத்துள்ளது. அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் போட்டு வாகனங்களை ஓட்டுங்கள்.
இது எனக்கு மட்டுமல்ல உங்களின் குடும்பத்திற்கும் முக்கியம். நீங்கள் எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் ஐந்து நிமிடங்களுக்கு முன்பே செல்லுங்கள். அவசர அவசரமாக கிளம்பாதீர்கள். நம் பலமுறை பார்த்து உள்ளோம். அவசர அவசரமாக பைக்கில் கட் அடித்து வேகமாக போகிறார்கள். இது எல்லாம் வேண்டாம், உங்களுக்கும் ஃபேமிலி இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது நடந்தால் அது யாரை பாதிக்கும் உங்களை தான் பாதிக்கும். மீண்டும் சொல்கிறேன் இதுபோல சான்ஸ் கிடைத்ததை வைத்து சொல்கிறேன். அனைவரும் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக பைக் ஓட்டுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.