நாடோடிகள் நடிகையை கர்பமாக்கி எஸ்கேப் ஆன மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது…!

20 June 2021, 11:30 am
Manikandan Arrest - Updatenews360
Quick Share

2009 ஆம் ஆண்டில் சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார், அனன்யா, விஜய் வசந்த், நடிப்பில் உருவான நாடோடிகள் படம் வசூல் அளவில் வாரி குவித்தது. இந்தப் படத்தில் வரும் “சம்போ சிவ சம்போ” பாடலுக்காக திரையரங்கு சென்றவர்கள் ஏராளம்.

அப்படி சசிகுமார் தனது தோழனுடன் நடிகை சாந்தினினியை சேர்த்து வைக்கும் அந்த காட்சி இன்றளவும் மீம்களில் பார்க்கலாம்.

இந்த படத்தில் நடித்த சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், சில நாட்களுக்கு முன்,அதிமுக வின் முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகார் அளித்து இருந்தார்.

நடிகை சாந்தினியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ள முன்னால் அமைச்சர் மணிகண்டன். கடந்த 5 ஆண்டுகளாக அவரை காதலித்துவிட்டு, திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை பேசி, அதன் பிறகு, இவரது ஆசையை காட்டி சாந்தினியை கர்ப்பம் ஆகியுள்ளார். இந்த காரணத்தால் தன்னை திருமணம் செய்யும்படி கேட்டதற்கு, மணிகண்டனோ சாந்தினியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்து, அவரை அடித்து துன்புறுத்தியுள்ளாராம்.

“இதற்குப் பிறகும் என்னை திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தினால், உன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்” என்று , கூலிப்படை ஆட்களை வைத்து மிரட்டியுள்ளாராம்.

இந்த புகாரை தொடர்ந்து மணிகண்டனை தேடி வந்த போலீசார் அவர் தலைமறைவாகி இருந்த இடத்தை கண்டுபிடித்து காவல் துறையினர் இவரை கைது செய்தனர். இன்று காலை கைதான மணிகண்டனிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 429

4

1