பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

Author: Prasad
20 June 2025, 4:24 pm

பிச்சைக்காரராக தனுஷ்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரர் வேடத்தில் மிகவும் அபாரமாக நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். எனினும் இரண்டாம் பாதியில் படம் ஆமை வேகத்தில் போவதாகவும் சுவாரஸ்யம் குறைவாக உள்ளதாகவும்  விமர்சித்து வருகின்றனர். 

free tickets for beggar for kuberaa movie x post viral on internet

பிச்சைக்காரர்களுக்கு டிக்கெட் இலவசம்

இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் ஒருவர் பிச்சைக்காரர்களுக்கு டிக்கெட் இலவசம் என கூறிய பதிவு வைரலாகி வருகிறது. அப்பதிவில், “குபேரா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நட்சத்திர அந்தஸ்து உள்ள ஒரு நடிகர் பிச்சைக்காரராக நடித்திருக்கும் இத்திரைப்படத்தை பிச்சைக்காரர்களால் பார்க்க முடியாது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. அவர்கள் பார்த்தால் நிச்சயம் பெருமையாக உணர்வார்கள். ஆதலால் நான் இரண்டு டிக்கெட்டுகளை பிச்சைக்காரர்களுக்கு வழங்க உள்ளேன். விருப்பமுள்ள பிச்சைக்காரர்கள் எனக்கு மெசேஜ் செய்யுங்கள் “ என பகிர்ந்துள்ளார். 

இவரின் எக்ஸ் தளப் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் “பிச்சைக்காரர்கள் எப்படி டிவிட்டர் கணக்கு வைத்திருப்பார்கள்” என லாஜிக்காக கேள்வி கேட்டு மடக்கி வருகின்றனர். 

  • Fahadh faasil said no to coolie movie  எனக்கு இந்த ரோல் வேண்டாம், Bye- லோகேஷ் பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்த ஃபகத் ஃபாசில்?