மாஸ்டரில் நண்பர் அஜித் மாதிரி: தல ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!

12 January 2021, 9:21 pm
Quick Share

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு இருவிதமான சர்ப்ரைஸ் காத்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு நாளை 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, நாசர், சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், ரம்யா சுப்பிரமணியன், கௌரி கிஷா, பிரிகிதா, அருண் அலெக்சாண்டர், அர்ஜூன் தாஸ், சாய் தீனா ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மாஸ்டர் படம் வெளியாவதையொட்டி ஒவ்வொரு நாளும் மாஸ்டர் படத்தின் புகைப்படங்கள் மற்றும் புரோமோ வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக மாஸ்டர் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானது. மாஸ்டர் பட காட்சி இணையத்தில் வெளியானதை யாரும் பகிர வேண்டாம் என்று தயாரிப்பு நிறுவனம், டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.
மாஸ்டர் பட காட்சிகளை இணையத்தில் லீக் செய்தது சோனி டிஜிட்டல் சினிமாஸ் நிறுவனம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காட்சிகள் லீக்கானது தொடர்பாக தனியார் நிறுவனம், ஊழியர் மீது புகாரளிக்க தயாரிப்பாளர் லலித்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மாஸ்டர் படத்தின் கதை, காட்சிகள் என்று அனைத்தும் நம் கண் முன்னே வந்து செல்லும் நிலையில், மாஸ்டர் படத்தில் 2 சர்ப்ரைஸ் காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று கில்லி படத்தில் வரும் கபடி கபடி பாடலின் ரீமேக்ஸ் படத்தில் இருக்கிறதாம். படம் வெளியான பிறகே கபடி கபடி பாடலின் ரீமேக்ஸ் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொன்று, அஜித்தை குறிப்பிட்டு சில காட்சிகள் இருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் போது நண்பர் அஜித்தைப் போன்று கோட் சூட் அணிந்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டு அப்படியே வந்திருப்பதாக விஜய் கூறியிருந்தார். இது தளபதி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், தல ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2 சர்ப்ரைஸும் படம் வெளியான பிறகு ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கும். முதல் முறையாக சினிமா வரலாற்றில் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்படும் திரையரங்கில் விஜய்யின் மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக விஜய்யின் மாஸ்டர் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுப்பதோடு பிளாக்பஸ்டர் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 5

0

0