பிகில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி எடுத்தாங்க? இதோ வீடியோ!

6 February 2021, 4:38 pm
Quick Share

விஜய் நடித்த பிகில் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்த நிலையில், தற்போது அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எடுத்த விதம் குறித்த வீடியோ ஒன்றை ஒளிப்பதிவாளர் ஜி வெங்கட்ராமன் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அப்பா – மகன் என்று இருவேறு கதாபாத்திரங்களில் நடித்த படம் பிகில். கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படத்தில், விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், அம்ரிதா ஐயர், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் திரையிடப்பட்ட பிகில் படம் ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது வீட்டில் மட்டுமல்லாமல், ஏஜிஎஸ் நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் என்று சோதனை நடந்தது. அன்புச்செழியன் வரி செலுத்தவில்லை என்றும்,

அவர் சில முறைகேடுகள் செய்திருக்கிறார் என்று வந்த புகாரைத் தொடர்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், அவர் தான் பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்துள்ளார் என்பதால், விஜய் வீட்டிலும், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடந்தது. அந்த சோதனையின் போது, சினிமா பைனாஸ்சியர் அன்புச்செழியனின் வீட்டில் இருந்த ரூ.77 கோடி கணக்கல் வராத ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ரூ.300 கோடிக்கும் அதிகமாகவே வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டது.

எனினும், விஜய் வீட்டில் எந்த ஆவணமும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி எடுக்கப்பட்டது என்பது தொடர்பான வீடியோ ஒன்றை ஒளிப்பதிவாளர் ஜி வெங்கட்ராமன் வெளியிட்டுள்ளார். அதில், அப்பா விஜய் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்றும், அவருக்கு அருகில் மகன் விஜய்யாக அட்லி கையில் கால்பந்து வைத்திருப்பது போன்றும் இருக்கும் வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு அப்பா – மகன் விஜய் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் மாஸ்டர் வெளியாகி ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. அதுவும், வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் ரூ.250 கோடி குவித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0