தமிழ் சினிமாவின் நவரச நாயகன் ஆண்களே காதல் கொள்ளும் ஆணழகன் என்றெல்லாம் புகழப்பட்டவர் தான் நடிகர் கார்த்திக். பொதுவாக இயக்குனர் பாரதிராஜாவின் கதாநாயகன் தேர்வு வித்தியாசமாக தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
கார்த்திக்கின் முதல் படம் அலைகள் ஓய்வதில்லை செம ஹிட் அடித்தது. கொஞ்ச நாட்களில் கார்த்தியின் தந்தை முத்துராமன் இறந்து விட்ட நிலையில் இதனால், கார்த்திக்கு வழிகாட்ட சரியான ஆளில்லாமல் அடுத்தடுத்து படங்களின் கதையை தேர்வு செய்ய தெரியாமல் தோல்விய படங்களையே ஒரு சமயத்தில் கொடுத்து வந்தார்.
இதனிடையே, வீட்டில் சும்மா இருந்தவரை நல்லவனுக்கு நல்லவன் படத்தில் மிகவும் சிரமப்பட்டு கார்த்திக்கை மீண்டும் நடிக்க சம்மதிக்க வைத்தது ஏவிஎம் நிறுவனம் தான். பிரபல தயாரிப்பாளர் தமிழ்மணி தயாரிப்பில் எம் எஸ் முரளி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவான சோலைக்குயில் படம் பெரும்பாலும், மலை பகுதிகளில் வைத்து படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த படத்திற்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைத்தால், பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் விரும்பியதால் அப்படி தேடி கண்டுபிடித்து நடிக்க வைக்கப்பட்டவர் தான் அந்தப் பகுதி படுகர் இனத்தை சேர்த்த ராகினி. மிகவும் கட்டுப்பாடான பழங்குடி இன மக்கள் படுகர் இன மக்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
ராகினியையும், அவ்வளவு எளிதில் நடிக்க சமதிக்க வைக்கவில்லை. ராகினியும் ஏற்கனவே கார்த்திக் ரசிகையாக இருந்ததால் கொஞ்சம் சிரமப்பட்டு இயக்குனர் பேசி சம்மதிக்க வைத்து நடிக்கவும் வைத்து விட்டார். பெரும்பாலும் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் கிசுகிசுக்கப்படுவார்கள். அந்த வகையில், கார்த்திக் சோலைக்குயில் படத்தின் போது ராகினியுடன் கிசுகிசுக்கப்பட்டது கோலிவுட் அறிந்த விஷயம் தான்.
ஆனால் அது கிசு கிசுவோடு நிற்காமல் ஜாதி பிரச்சனையும் தாண்டி திருமணத்தில் முடிந்தது. சில நாட்கள் கழித்து ராகினியின் தங்கையும் கார்த்திக் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார் என்ற வதந்தியும் மிக வேகமாக பரவியது.
இது குறித்து, ஒரு முறை நிருபர்கள் நடிகர் கார்த்தியிடம் கேட்டபோது, நான் யாரையும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், இந்த திருமணம் தன் மனைவியின் சம்மதத்துடன் தான் நடைபெற்றது என்று கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கு பின்னர் மௌன ராகம், அக்னி நட்சத்திரம் போன்ற சிட்டி லைப்ஸ் படங்களிலும் பொன்னுமணி கிழக்கு வாசல் போன்ற கிராமத்து நாயகன் கதையிலும் பட்டையை கிளப்பி ரஜினி கமலுக்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால், மதுப்பழக்கம் சூட்டிங் சரிவர வராத காரணம் போன்றவற்றால் சினிமாவில் தன்னுடைய இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார் நடிகர் கார்த்திக்.
இந்நிலையில், கௌதம் கார்த்திக் ஒரு பேட்டியில் அப்பா இரண்டாவது திருமணம் செய்ததால் இருவரும் பிரிந்து விட்டார்கள். தான்தான் தனிமையில் வாடினேன் என்றும், அப்பா சென்னையில் இருந்ததால் தான் அம்மாவுடன் இருந்ததாகவும், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் அப்பாவிடமிருந்து போன் வரும் எனவும், எப்போதாவது தான் பார்க்கவே வருவார் என்றும், சிங்கிள் மதராக இருந்து தன் அம்மா தங்களை வளர்த்ததாகவும், பல்வேறு பிரச்சனைகள் அந்த சமயத்தில் இருந்ததாகவும், அதையும் மீறி தன்னையும் தம்பியும் தன் தாய் வளர்த்தார் என கௌதம் கார்த்திக் உருக்கமாக பேசியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.