கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து அவர் கொடுக்கும் வாய்ஸ் ஓவர்களும் நினைவில் வரும். கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் வெகு காலமாக வெளிவராமலே இருக்கின்றது. இதற்கிடையில் அவர் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள “DD Next Level” திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சந்தானம் கதாநாயகனாக நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த “DD Returns” திரைப்படத்தின் தொடர்சியாக உருவாகியுள்ள திரைப்படம்தான் “DD Next Level”. இத்திரைப்படத்தில் சந்தானத்துடன் கௌதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலரை பார்க்கையில் ஒரு வித்தியாசமான ஹாரர் காமெடி திரைப்படமாக இது உருவாகியுள்ளது என தெரிய வருகிறது.
இந்த டிரைலரில் கௌதம் மேனனும் யாஷிகா ஆனந்தும் “காக்க காக்க” திரைப்படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே பாடலை அப்படியே பிரதிபலிப்பது போல் ஒரு காட்சி துணுக்கு இடம்பெற்றுள்ளது. அப்பாடலில் சூர்யா எப்படி பாடிக்கொண்டே கடற்கரையில் ஜோதிகாவை துரத்துவாரோ அதே போல் கௌதம் மேனன் பாடிக்கொண்டே யாஷிகாவை துரத்துகிறார். “DD Next Level” டிரைலரில் இடம்பெற்ற இந்த காட்சித் துணுக்கு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இத்திரைப்படம் வருகிற மே 16 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.