சிம்புவுக்கு வில்லனான கௌதம் மேனன்!

28 January 2021, 6:58 pm
Quick Share

சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் அவருக்கு வில்லனாக இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து முஃப்தி என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். பத்து தல என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார். இதில், சிம்பு உடன் இணைந்து கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். மேலும், சிம்புவிற்கு இந்தப் படத்தில் ஜோடி இல்லை என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

ப்ரியா பவானி சங்கர் தான் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில், பத்து தல படத்தின் வில்லன் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ளார். அதன்படி, பத்து தல படத்தில் சிம்புவிற்கு வில்லனாக இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கௌதம் மேனன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாவக் கதைகள் படத்தில் சிம்ரனுக்கு கணவனாக ஒரு குடும்பத் தலைவனாக இரு பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் வந்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் எனப்து மடமையடா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 54

0

0