‘தல’ ரசிகர்களுக்கு இன்னைக்கு மாஸ் Treat: வெளியாகிறது ‘வலிமை’ Glimpse..!!

Author: Aarthi Sivakumar
23 September 2021, 2:03 pm
Quick Share

அஜித்தின் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின், முதல் பாடல் ‘நாங்க வேற மாரி’ வெளியாகி கவனம் ஈர்த்தது. 2022ம் ஆண்டு பொங்கலையொட்டி வலிமை திரைப்படம் வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

விரைவில் டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ள நிலையில், வலிமை படத்தின் ‘கிளிம்ப்ஸ்’ (முன்னோட்ட வீடியோ) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இந்த வீடியோவில் அஜித்தின் சண்டைக்காட்சிகள் மட்டுமே முழுக்க முழுக்க இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ValimaiGlimpse என்ற ஹேஷ்டேக்கிலும் வலிமை தொடர்ந்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 340

5

0