வேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்!!

Author: Aarthi Sivakumar
23 September 2021, 6:50 pm
Quick Share

‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது.

Image

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் glimpse இன்று மாலை 6:03 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியானது. இந்த செய்தி அறிந்த தல ரசிகர்கள் குஷியுடன் glimpse ரிலீசுக்கு காத்திருந்தனர்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும், அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ‘வலிமை’ திரைப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக அஜித்தின் வலிமை திகழ்கிறது. 2 வருடங்களுக்கு மேல் எடுக்கப்பட்டு வந்து இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர் செய்த அட்டகாசங்கள் ஏராளம். இந்த நிலையில் இந்த படத்தின் சிறு வீடியோ அதாவது 15 முதல் 20 வினாடிகள் அடங்கிய வீடியோ ஒன்று இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.

Image

இந்நிலையில், முதல் பார்வையில் அஜித் நடித்த சண்டைக்காட்சிகள் வெளியாகும் என்ற தகவல் தீயாய் பரவிய நிலையில், எதிர்பார்த்தபடி Glimpse ரிலீஸ் ஆனது. இதுஒருபுறம் இருக்க, வலிமை glimpse குறித்த அப்டேட் கேட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் ரகளை செய்து வருகின்றனர். இருப்பினும், அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த glimpse video வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

Image

மாலை 6.03க்கு வெளியாகும் என அறிவித்து 6.30க்கு வெளியானது அதற்குள்ளாக தல ரசிகர்கள் ட்விட்டரில் களேபரத்தையே ஏற்படுத்திவிட்டனர்.

Views: - 302

11

0