நான் அசிங்கமா இருக்கேன்ல? அதான் யாரும் கூப்பிடல – பரிதாப நிலையில் கோலிசோடா சீதா!

Author: Shree
31 March 2023, 10:17 am
kolisoda
Quick Share

2014ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கோலி சோடா . விஜய் மில்டன் இயக்கியிருந்த இப்படத்தில் பசங்க திரைப்படத்தில் நடித்து சிறுவர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அறிமுகமானவர் தான் சீதா. அந்த படத்தில் சீதாவின் கதாபாத்திரம் காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் ஆழமாக நின்றது.

இயக்குனர் விஜய் மில்டன் இந்த கேரக்டருக்கு நிறைய பேரை ஆடிசன் செய்தாராம். ஆனால் யாரும் செட் ஆகவில்லை. பின்னர் ஒரு நாள் காலையில் பைக்கில் சென்றுகொண்டு இருக்கும்போது இந்த பொண்ணு நடந்து வந்துக்கொண்டு இருந்தார் . பார்த்ததும் எனக்கு டக்கென தோனுச்சு. இந்த பொண்ணு படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று. உடனே அவரிடம் நம்பர் கேட்டதும் தப்பா நினைச்சுகிட்டு மோசமாக என்னை திட்டிவிட்டார்.

பின்னர் நடிக்க கூப்பிடுகிறேன் என எடுத்து கூறியும் கேட்கவில்லை. அதன் பின் அவரது தோழியின் வீட்டுக்கு சென்று கேட்டேன். ஒரு வழியாக புரிந்துகொண்டு சம்மதித்தார் என இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சீதா பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், “கோலி சோடா படத்தில் எனக்கு தற்செயலாக தான் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பின்னர் சமந்தாவுடன் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்திருந்தேன். பின்னர் யாரும் என்னை கூப்பிடவே இல்லை. நான் பார்ப்பதற்கு நல்லா இல்லை அதனால் தான் யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்க மாட்றாங்க என உருக்கமாகி பேசியுள்ளார்.

Views: - 525

13

1