இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு, அதுக்குள்ள ஓடிடி, சன் டிவிக்கு பிளான் போட்ட ஜிவி பிரகாஷ்?

23 January 2021, 10:21 pm
Quick Share

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளர், நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். வருடத்திற்கு 5க்கும் அதிகமான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவே அவதாரம் எடுத்தார். ஆரம்ப காலத்தில் இவரது படங்களுக்கு டைட்டிலும் வித்தியாசமாக இருப்பதோடு டபுள் மீனிங் படமாகவும் இருந்தது.

தற்போது குடும்பத்தோடு பார்க்கும் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் நடிப்பில், ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர், டிராப் சிட்டி என்று ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மிஸ்டர் லோக்கல் என்று பல படங்களை இயக்கிய இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.

இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தப் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

அதோடு, ஓடிடி தளத்திலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு புறம் மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக ராஜேஷ் – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் கடவுள் இருக்கான் குமாரு படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0