இனிமேல் கவலை வேண்டாம்: ஆல்பம் பாடல்களில் நடித்துக் கொள்ளலாம்: ஹன்சிகா நம்பிக்கை!

3 March 2021, 9:42 pm
Quick Share

நடிகை ஹன்சிகா மோத்வானி பட வாய்ப்பு இல்லாததால், ஆல்பம் பாடல்களில் நடித்து அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தனுஷ் நடிப்பில் வந்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், வாலு, சிங்கம் 3, குலேபகாவலி, 100 என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர். ஆனால், தற்போது அவருக்கு சினிமா வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள மஹா படமும் இன்னும் வெளிவரவில்லை. இது அவரது 50ஆவது படம். தமிழ் மட்டுமல்ல, இவர் நடித்துள்ள தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று எந்த மொழியிலும் பட வாய்ப்பு வரவில்லை. என்னதான் தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தாலும், அப்படி ஒன்றும் வாய்ப்பு வரவில்லை.

இந்த நிலையில், தான், அவர் ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார். அதோடு, அந்தப் பாடல்களை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். இவர் நடித்த பூட்டி ஷேக், மாஸா போன்ற ஆல்பம் பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இனிமேல், பட வாய்ப்பு வரவில்லை என்றாலும் கூட கவலை இல்லையாம். மாறாக அவர் தொடங்கியுள்ள யூடியூப் சேனலில், ஆல்பம் பாடல்களை வெளியிடலாம் என்று நம்பிக்கையில் இருக்கிறாராம்.

Views: - 1

3

0