நடிகர் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளியில் அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி இவர்கள் காதலிப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், சோபிதா துலிபாலா இது உண்மை இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள் என கூறி அந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் இந்த விஷயம் பெரிது படுத்தாமல் இருந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவரும் தனித்தனியே புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்கள்.
அதாவது ஒரே இடத்தில் சென்றாலும் இருவரும் சேர்ந்து எடுக்காத புகைப்படங்களாக பார்த்து தனித்தனியே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இதன் மூலம் அந்த அவர்கள் செல்லும் லொகேஷன் வைத்து ரசிகர்கள் கண்டுபிடித்து இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்பதை உறுதியாக கூறி வந்தார்கள் .
ஆனாலும், தங்களுடைய ரகசிய காதல் குறித்து வாய் திறக்காமல் மௌனம் காத்து வந்த சோபிதா மற்றும் நாகா சைத்தன்யா இருவரும் இன்று திடீரென திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி தான் டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பான செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது.
இப்படியான நேரத்தில் சமந்தாவின் மனநிலை எப்படி இருக்கும்? என அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையையும் அவருக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சமந்தா பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை அடுத்து வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்தே தான் ஓய்வு பெற போவதாக அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பிற்கு சமந்தா இதயம் நொறுங்கி விட்டது என பதிவு ஒன்றை இட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்திருக்கிறார்.
இதை அடுத்து சமந்தாவின் அந்த பதிவுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும் கூடிய விரைவில் நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை பற்றியும் சமந்தா ஏதேனும் பதிவு நிச்சயம் போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
0