மதுரை பள்ளிக்கு உதவுங்கள்: கத்ரீனா கைஃப் வேண்டுகோள்!

24 December 2020, 12:26 pm
Katrina Kaif - Updatenews360
Quick Share

தனது தாயின் அறக்கட்டளையால் கட்டப்பட்ட மதுரைப் பள்ளிக்கு உதவ வேண்டும் என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வேண்டுகோள் வைத்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். பூம் படத்தில் தொடங்கி தற்போது ஆங்கிரேஸி மீடியம் படம் வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யவன்ஷி மற்றும் போன் பூத் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மதுரையில் உள்ள பள்ளி குறித்து முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், தனது தாயின் அறக்கட்டளையால் கட்டப்பட்ட மதுரை பள்ளியைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மதுரையில் உள்ள மௌண்டைன் வியூ என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், தரமான ஆங்கில வழிக்கல்வி ஏழை மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.

இந்தப் பள்ளியில், 4ம் வகுப்பு வரை படிப்பதற்கான வசதி உள்ளது. அதோடு, மேலும், 14 வகுப்பறைகள் கட்டப்பட வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக நம்மால், முடிந்த உதவிகளைச் செய்து ஏழை குழந்தைகளின் கனவை நனவாக்குவோம். மேலும், ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது மிகவும் அவசியம். உதவி செய்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ketto.org/fundraiser/our-students-are-growing-please-help-our-school-grow என்ற நிதிதிரட்டும் அமைப்பு மூலமாக நிதி திரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0