துடைப்பமே இனி கிரிக்கெட் மட்டை… பிரபல நடிகையின் வைரல் வீடியோ…

26 March 2020, 1:30 pm
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிவரை ஊடரங்கு சட்டத்தை நேற்றிலிருந்து பிரதமர் மோடியின் தலைமையில் அமல் படுத்தப்பட்டது. தற்போது உலகமெங்கும் இந்த கொரோனா வைரஸால் மக்கள் தங்களது வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.


அவர்களை உற்சாகமூட்டும் வகையிலும், ஆதரவு அளிக்கும் வகையிலும், பல சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் ஏதேனும் ஒரு கலைத்திறன் நிறைந்த வீடியோ, புகைப்படம், கவிதை, கதை, ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிட்டுவருகின்றனர்.


அதன் வரிசையில் பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப் தனது வீட்டை சுத்தம் செய்வதுப்போல் தொடங்கும் ஒரு வீடியோவினை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவில் அவர் வீட்டைத் தூய்மைப்படுத்தும் துடைப்பத்தை வைத்து கிரிக்கெட் ஆடுவதுப்போல் அமைந்துள்ளதால் இந்த நிலைமைக்கு ஒரு தேவையான நகைச்சுவையை அதன்மூலம் அவர் தந்துள்ளார்.