சதீஷை “ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா” என்று கிண்டல் செய்த தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்…!

19 February 2020, 1:22 pm
Quick Share

தமிழ் சினிமாவில் தற்போது நிகழ்ந்துவரும் ஆச்சரியமூட்டும் விதமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். “Friendship” என்ற பெயர்க்கொண்ட இந்த படத்தில் லாஸ்லியா மரியநேசன், அர்ஜுன், சதிஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.


ஹர்பஜன் சிங் தமிழ் மொழிமேல் அதிகம் பற்றுக்கொண்டவர். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட ஆரம்பித்ததிலிருந்து தமிழில் ட்வீட் போட்டு தமிழ் நாட்டு மக்களை அதிகம் கவர்ந்து வருகிறார். தற்போது ஒரு படி மேல் இந்த படமட்டுமின்றி “திருவள்ளுவர் கன்சல்டிங் சர்வீஸ்” என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.


தற்போது இந்த படத்தில் காமெடி நடிகர் சதிஷ் இணைந்த செய்தியை அடுத்து அவரைப்பற்றி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில் “புது மாப்பிள்ளை @actorsathish எப்பிடி இருக்கீங்க.தம்பி நல்லா சிரிச்ச முகம்.பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க.படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.நல்லா நெருக்கி செய்வோம்” என்று கூறியுள்ளார்.