வசூல் சாதனை செய்யும் புஷ்பா..! அல்லு அர்ஜுன் மீது கோபத்தில் இருக்கும் இந்தி நடிகர்கள்..!
Author: Rajesh31 January 2022, 2:48 pm
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா’.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இதனை தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து, பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
சினிமா நட்சத்திரங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை, இந்த படத்தின் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி, இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். முன்னணி இயக்குனர்கள் பலரும் இந்த படத்திற்கு பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இந்தியில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது. இந்த நிலையில் டப்பிங் படமான ‘புஷ்பா’ திரைப்படமும் 100 கோடி வசூல் செய்துள்ளது பாலிவுட் திரையுலகினர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
அதுமட்டுமின்றி மிகப்பெரிய தொகைக்கு ஓடிடியில் இந்த படம் வியாபாரம் ஆனதை அடுத்து ஓடிடியிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ‘புஷ்பா’ வெற்றியை அடுத்து பான் – இந்தியா ஸ்டாராக அல்லு அர்ஜுன் உயர்ந்து உள்ளார் என்பதால் இந்தி நடிகர்கள் பலரும் அவர் மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
8
4