‘இந்தி தெரியாது போடா’ டி-சர்ட் விவகாரம் : யுவன்சங்கர் ராஜாவை காரசாரமாக சாடிய பிரபல இயக்குநர்..!

9 September 2020, 6:49 pm
Quick Share

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வரும் தி.மு.க., அண்மையில் ‘இந்தி தெரியாது போடா’ என்னும் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கியது. இதைத் தொடர்ந்து, தனது தொடர்புகளை பயன்படுத்தி, யுவன் சங்கர் ராஜா, நடிகர் ஹரீஷ், சாந்தனு பாக்கியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர், ‘இந்தி தெரியாது போடா’, ‘ஐ ஆம் தமிழ் பேசும் இந்தியன்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை போட்டு, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இதற்கு ஆதரவு ஒருபுறம் தெரிவித்து வந்தாலும், இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த பிரபலங்கள் தாய் மொழியான தமிழை வளர்க்க என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள், என பெரும்பாலானோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, காமெடி நடிகை ஆர்த்தி, இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபலங்களை நேரடியாகவே விமர்சித்துள்ளார். அதாவது, இந்தி பட வாய்ப்பு கிடைத்தால் டி-சர்ட்டை மாற்றி விடுவார்கள், பிரபலங்கள் ஜாக்கிரதை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவரைத் தொடர்ந்து இயக்குநர் தங்கர்பட்சனும் இந்தி எதிர்ப்பு பிரபலங்களை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தி எதிர்ப்பு என்பது இந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்காதவரை தான். ஆங்கிலத்தில் தமிழுணர்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கர் ராஜா கூட்டத்தில், எத்தனை பேர் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இவர்களெல்லாம் தமிழுணர்வை கற்றத்தர களமிறங்கியிருப்பது தமிழினத்தின் தலையெழுத்து,” எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.

Views: - 0

0

0