தமிழ் சினிமாவில் சமீப காலமாக நெப்போடிசம் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாலிவுட்டில் தான் அப்படி என்றால் கோலிவுட்டிலும், தற்போது வாரிசு நட்சத்திரங்கள் அதிகரித்து வருகிறார்கள். அப்படி நடிகைகளாக அறிமுகமாகும் நடிகர்களின் மகள்களால் மொத்த பெயரையும் காற்றில் பறக்க விட்டு இருக்கிறார்கள் டாப் நடிகர்கள். அப்படி அப்பா பேச்சை கேட்காத நடிகைகள் யார் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
ராதிகா
ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
நடிகர் ராதாவின் ஐந்தாவது மனைவியாக இலங்கைப் பெண் கீதா என்பவர் மூலம் பிறந்தவர் தான் நடிகை ராதிகா. அப்பனுக்கு தப்பாமல் பிறந்த குழந்தை என்று இவரை சொல்லலாம். அப்பாவை போல் மூன்று திருமணம் செய்து அப்பாவிற்கு தப்பாமல் இருந்து வருகிறார். இவர் சரத்குமாரை திருமணம் செய்து ராகுல் என்ற மகனையும் ராதிகா பெற்றிருக்கிறார்.
வனிதா விஜயகுமார்
விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள்கள் அனைவரும் சினிமாவில் அறிமுகமாகினார்கள். அதில், வனிதா விஜயகுமார் காலப்போக்கில் குடும்பத்திற்கே எதிரியாக மாறிவிட்டார் என்று சொல்லலாம். மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன் பின்னர், பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று வந்தார். அதிலும், வனிதாவின் வாய்ப்பேச்சால் பல வெறுப்பையும் சம்பாதித்து வந்தார் என்று சொல்லலாம்.
சுருதிஹாசன்
உலக நாயகன் மகளாக சினிமாவில் அறிமுகமானவர்தான் சுருதிஹாசன். இவர் ஆரம்பத்திலிருந்து சர்ச்சையில் சிக்கினார். பல முன்னணி நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்குவதை வழக்கமாக வைத்து இருந்தார். அதன்பின் வெளிநாட்டு நபருடன் ஊர் சுற்றி லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து அதன் பின்னர் பிரிந்து தற்போது, சாந்தனு என்பருடன் மீண்டும் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் இவர் 21 வயதில் அப்பா வீட்டை விட்டு வெளியேற்றியதன் பின்னர் தன் பொருளாதாரத்தை தானே பார்த்து வருவதாகவும் கூறினார். எப்போதும் ஆக்டிவாக இருந்து தனது காதலனிடம் திருமணமாகாமல் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமி
டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
வரலட்சுமி போடா போடி என்ற படத்தின் மூலமாக சிம்புக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் சரத்குமாரின் மகள். அதன்பின் விஷாலுடன் ஊர் சுற்றி காதலித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று தற்போது இருந்து வருகிறார்.
அதிதி சங்கர்
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். டாக்டர் படிப்பை முடித்து இயக்குனர் சங்கர் மகள் அதிதி சினிமாவில் விருமன் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் அறிமுகமான முதலே ஆரம்பத்தில் இருந்து பல அலப்பறைகளைக் காட்டி கிரின்ச் செய்து வந்தார். அதிலும், அப்பாவை மீறி தற்போது பல படங்களில் கமிட்டாகி கிளாமர் ரூட்டையும் கையில் எடுத்து அப்பாவின் பெயரை கெடுத்து வருகிறார் அதிதி.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.