பார்வதி நாயர் தன்மீது அளித்த திருட்டுபுகார் உண்மையில்லை என்றும், அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தேனாம்பேட்டை போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் பார்வதி நாயர். இவர் தமிழில் கமல்ஹாசனின் உத்தம வில்லன், பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக, உதயநிதி ஸ்டாலின் உடன் நிமிர், விஜய் சேதுபதியின் சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் ஆலம்பனா என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பார்வதி.
வளர்ந்து வரும் நடிகையான இவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த மாதம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வீட்டில் இருந்து விலையுயர்ந்த கடிகாரங்கள், ஐபோன் மற்றும் லேப்டாப் என 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார். இவற்றையெல்லாம் தன்வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்கிற இளைஞன் தான் திருடிவிட்டதாகவும் பார்வதி நாயர் கூறி இருந்தார்.
இந்நிலையில், தன் மீது திருட்டு புகார் அளித்த பார்வதி நாயர் மீது சுபாஷ் சந்திர போஸ் சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பார்வதி நாயர் தன்மீது அளித்த திருட்டுபுகார் உண்மையில்லை என்றும், அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் ஆண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு பார்வதி நாயர் போதை பார்ட்டி கொடுத்ததாகவும், ஆண் நண்பர்களுடன் அவர் தனி அறையில் இருந்ததை நான் பார்த்துவிட்டதால் என்மீது அவருக்கு கோபம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின்னர் தான் என்னை அநாகரிகமாக நடத்தி வந்தார்.
என்னை அடிச்சு துன்புறுத்தி, என்மீது எச்சில் துப்பி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். என்மீதான திருட்டு புகாருக்கு மறுப்பு தெரிவித்து நான் புகார் அளித்ததை அறிந்ததும், ‘நீ என் மீதே புகார் கொடுக்குறியா… நீ என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக நான் உன்மீது புகார் கொடுப்பேன்’ என்று என்னை அழைத்து மிரட்டினார்.
நான் எதையும் அவரது வீட்டில் இருந்து திருடவில்லை. அவர் வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.