“எப்படிப்பா மனசு வருது உங்களுக்கு?” ரசிகர்களை திட்டிய “குக் வித் கோமாளி” புகழ் !

18 April 2021, 12:49 pm
Quick Share

பொதுவாகவே நடிகர்கள் எங்கு சென்றாலும் ரசிகர்களின் செல்பி மோகம் விடுவதில்லை. இதனால் பல நடிகர் நடிகைகள் சத்தமில்லாமல் வந்து, சத்தமில்லாமல் போகிறார்.அப்படி இருக்கும் பட்சத்தில், தற்போது கொரோனா சமயத்தில், ரசிகர்கள் அவர்களின் ஆரோக்கியத்தை பற்றி கவனிக்காமல், நடிகர், நடிகைகளின் ஆரோக்கியம் பற்றி கவனிக்காமல், நடிகர்களிடம் அனுமதி எதுவும் பெறாமல் செல்ஃபி எடுப்பது இப்போது அதிகமாக்கி விட்டது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன், அஜித் வாக்குச்சாவடியில் ஒரு ரசிகர் இவரை கேட்காமல் செல்ஃபி எடுத்து அதன் பின் அவரை கண்டித்தார்.

இதே போல் நேற்று பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் காலமானதை அடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு நேரில் அஞ்சலி தெரிவித்தனர். அந்த வகையில் குக் வித் கோமாளி புகழ் நேற்று நேரில் சென்று விவேக் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது ஒரு ரசிகர், புகழுடன் செல்பி எடுக்க கேட்டதால், “நான் டெத்துக்கு வந்து இருக்கன், இங்கே எப்படிப்பா உங்களுக்கெல்லாம் போட்டோ எடுக்க மனசு வருது” என்று ரசிகரை கண்டித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 44

1

0