நீங்க வலிமை பட ஹீரோயின் இல்ல வலிமையான ஹீரோயின்.. ! பாத்டப்பில் பட்டைய கிளப்பிய போட்டோ சூட்..

Author: Rajesh
22 February 2022, 1:49 pm
Quick Share

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி தான் ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார். ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது.

தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்துள்ளார்.  சமீபத்தில் 30 நிமிடம் ஓடக் கூடிய வலிமை படத்தின் வீடியோ ஒன்றை அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார். அதில் அதில் அவரது லுக் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவார். அந்த வகையில் தற்போது பாத்டப்பில் எடுக்கப்பட்ட போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.  

Views: - 687

2

0