இந்திய சினிமாவில் பிரபல நடிகையான டாப்ஸி தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்டது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2019 சும்மாண்டி நாதம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .
அதை எடுத்து தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். மாடல் அழகியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் வந்தான் வென்றான் , திரைக்கதை வசனம் இயக்கம் , வை ராஜா வை, முனி, அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிட்டுத்தக்கது .
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சமீப நாட்களாக புகைப்பட கலைஞர்களான Paparazzi பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை துரத்தி துரத்தி சென்று போட்டோ எடுக்கிறார்கள். இது குறித்து டாப்ஸி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
அதாவது, நான் பிரபலமான ஒரு நடிகை தானே தவிர பொது சொத்து கிடையாது. திரைக்கு பின் இருக்கும் பெண்கள் No என்றால் No. ஆனால் அதுவே ஒரு நடிகை கூறினால் ஏற்கமாட்டர்கள்.
நான் முதலில் பெண் அதன் பின்தான் நடிகை. நான் இப்படி சொல்வதால் இது எனக்கு ஏற்ற தொழில் கிடையாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நடிப்பு என்பது நான் விரும்பும் தொழில் என்று காட்டமாக பேசியிருக்கிறார் நடிகை டாப்ஸி.
0
0