“இனி என்னால அதை செய்ய முடியாது…” யாஷிகா ஆனந்தின் வருத்தம் !

Author: kavin kumar
19 August 2021, 7:20 pm
Yaashika Aanand - Updatenews360
Quick Share

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

யாஷிகா ஆனந்த் இன் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துக்களை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர். “இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து என்னை காப்பாற்ற இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா, இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கோபித்து கொள்வதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் நான் பவானியை மிஸ் செய்வேன் நீ என்னை மன்னிக்க மாட்டார் என்பது தெரியும் என்னை மன்னித்துவிடு உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன்..” போன்ற பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த யாஷிகா, இடுப்பு எலும்பில் பல முறிவுகளும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சர்ஜரிக்கு பிறகு ரெஸ்ட் எடுத்து வருகிறேன், அடுத்த 5 மாதத்திற்கு என்னால் நிற்கவோ, நடக்கவோ முடியாது, உடலை இடமோ வலமோ கூட திருபமுடியாத நிலை. இயற்கை உபாதைகள் எல்லாம் படுத்த படுக்கையில் தான். முதுகு எலும்பில் பலத்த காயம் அடைந்துள்ளது. நல்ல வேளையாக முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. கடவுள் எனக்கு தண்டனை கொடுத்துவிட்டார் என்று கூறியுள்ள நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உடற் பயிற்சி செய்த வீடியோவை பதிவிட்டு தற்போது இருக்கும் நிலையில் இது எனக்கு சாத்தியமே இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 678

10

0