இளம் ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்த ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் டாப் நடிகராகவும் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜெயம் ரவி.
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து ஜெயம்ரவி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
குடும்பம் குழந்தைகள் என பிசியாக இருந்து கொண்டே திரைப்படங்களிலும் அதிக ஆர்வத்தை செலுத்தி நடித்த வந்தார். இதனுடையே திடீரென மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் ஜெயம் ரவி. அந்த அறிவிப்பு வெளியானதும் எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும் நடிகை ஆர்த்தி இது குறித்து பேசும்போது எனக்கு விருப்பமே இல்லை எங்களிடம் கலந்து யோசிக்காமல் அவரது தனிப்பட்ட முடிவாக விவாகரத்தை அறிவித்திருக்கிறார் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.
அதை எடுத்து ஜெயம் ரவி என்னை ஆர்த்தி டார்ச்சர் செய்தார்…. மாமியார் பண விஷயத்தில் .என்னை ஏமாற்றினார் எனக்கென தனி வங்கி கணக்கு கூட இல்லை. நான் பத்து ரூபாய் செலவு செய்தால் கூட ஆர்த்தி கணக்கு கேட்பார் . மேலும் என்னுடைய அசிஸ்டன்ட் இடம் போன் பண்ணி யார் கூட இருக்கிறேன்? எங்க இருக்கிறேன்? என்ன செலவு செய்தார்? என கேள்வி கேட்டது எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இதெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை இதனால் தான் விவாகரத்து என கூறி இருந்தார்.
இவர்களின் இந்த விவாகரத்து விவகாரம் இப்படி நாளுக்கு நாள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் பணத்தின் தேவை குறித்து பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, பணத்தை பொருத்தவரை நான் சிறுவயதிலிருந்து நிறைய பணத்தை பார்த்திருக்கிறேன் .
என்னுடைய அப்பா சம்பாதித்த பணத்தை கட்டு கட்டாக கொண்டு வந்து கொடுப்பார். அதனால் நான் நிறைய பணத்தை பார்த்திருக்கிறேன். ஆனால், எனக்கு பணத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு கிடையாது. பணம் இல்லை என்று வருத்தப்பட மாட்டேன். பணம் இல்லை அவ்வளவுதானே கை கால் இருக்கு நல்ல திறமை இருக்கு என்று நான் நினைப்பேன்.
இதையும் படியுங்கள்: பூக்கள் பூக்கும் தருணம் பாடல் இப்படி தான் உருவாச்சு… Live’அ மியூசிக் போட்ட GV!
மக்கள் சினிமாவில் எனக்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்காங்க அதுக்கு எவ்ளோ கோடி கொடுத்தாலும் ஈடாகாது என ஜெயம் ரவி உருக்கமாக பேசியிருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு அவர் பேசியிருக்கும் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக அவருக்கு பலரும் ஆறுதலையும் கூறி வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.