வேம்புலி கதாபாத்திரத்தை உங்களுக்கு DEDICATE பண்ணுறேன் அஜித் சார்..! – சர்பட்டா நடிகர் நெகிழ்ச்சி.!

Author: Udhayakumar Raman
22 July 2021, 8:18 pm
Quick Share

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பேட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும். இதில் ஆர்யா சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இரண்டு பாக்ஸிங் பரம்பரைக்குள் நடக்கும் பகை பற்றி இக்கதை அமைந்திருக்கும் கதை. இதில் இடியாப்ப பரம்பரையில், வேம்புலி எனும் பாக்ஸராக அசத்தி இருப்பவர் ஜான் கொக்கன். கதாபாத்திரத்திற்கு ஒன்றி நடித்ததற்காக ரசிகர்கள் இவரை மெச்சி வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு ஊக்கம் கொடுத்தது அஜித் தான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது : என்னை எப்போதும் ஊக்குவித்ததற்கும், எனக்கு தன்னம்பிக்கை கொடுத்ததற்கும் நன்றி அஜித் சார். நான் கடினமாக உழைப்பதற்கும், நல்ல மனிதனாக இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். நான் இந்த வேம்புலி கதாபாத்திரத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். லவ் யூ சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 386

5

0