“என் கணவரை வேவு பார்க்கத்தான் இதை செய்தேன்” – ஓப்பனாக போட்டு உடைத்த சமந்தா !

1 February 2021, 9:20 am
Quick Share

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சாட் செய்த சமந்தா, ரசிகர் ஒரு ரகசியத்தை கூறுமாறு கேட்க, அப்போது “யாருக்கும் சொல்லாத ரகசியத்தை இங்கே உங்களிடம் சொல்கிறேன்.. நான் ஏன் ஜிம்மில் இணைந்தேன் தெரியுமா..? ஏன்னா என் கணவர் நாகசைதன்யாவும் இந்த ஜிம்தான். அவர் இங்கே என்ன செய்கிறார், நிஜாமாகவே வொர்க் அவுட் செய்கிறாரா என கணவரை வேவு பார்க்கத்தான் இந்த ஜிம்மில் Join பண்ணேன்” என தான் ஜிம்மில் இணைந்தது ஏன் என்பது குறித்த ரகசியத்தையும் போட்டு உடைத்தார்.

Views: - 3

0

0