” எனக்கு Boy Friend இருக்கான்” – மீண்டும் காதலில் விழுந்த ஸ்ருதிஹாசன் !

25 January 2021, 7:46 am
Quick Share

தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்..

இந்த நிலையில் நேற்று ஸ்ருதி ஹாசன் அவர்கள் பொழுதுபோகாமல் ரசிகர்களோடு பேசுவோம் என்று Live வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் “உங்களுக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறாரா?” என கேள்வி கேட்டார். அதற்கு “ஆமாம் இருக்கிறார்” என ஸ்ருதிஹாசன் பதிலளித்தார். இன்னொருவர், “உங்களின் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா?” என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். “அதற்கு தான் யாரையும் எப்போதும் வெறுப்பதில்லை” என ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.

Views: - 2

0

0