“வடிவேலு பாலாஜியை அடுத்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன்” பிரபல இயக்குனர் உருக்கம் !

11 September 2020, 4:17 pm
Quick Share

விஜய் டிவி புகழ் நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி ரசிகர்களையும் சினிமா நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர்கள் பலர் அவருடைய மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

மேலும் வடிவேல் பாலாஜியின் மகன் மகளின் படிப்பு செலவு முழுவதையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன், இயக்கிய முதல் திரைப்படமான ’கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் வடிவேல் பாலாஜியை பயன்படுத்தியிருப்பார்.

அதேபோல், தற்போது நெல்சன் இயக்கி வரும் டாக்டர் படத்தில் வடிவேலு பாலாஜிக்கு கேரக்டர் இல்லை என்றாலும் அவரது அடுத்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரை ஒதுக்கி வைத்து இருந்ததாக கூறியுள்ளார். இப்படி திட்டமிட்டிருந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று பேட்டி ஒன்றில் இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்.

Views: - 0

0

0