மூன்று வருடம் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்-ல் இருந்தேன் : நடிகை சாக்ஷி அகர்வால் ஓப்பன் டாக்..!
Author: Rajesh7 April 2022, 3:50 pm
நடிகை சாக்ஷி அகர்வாலின் அழகை வர்ணித்தும், பலர் திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.
அந்தவகையில்,
இந்த நிலையில், சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் கலந்து கொண்ட போதே கவினுயுடன் காதல் வயப்பட்டார். அப்போது அதுவே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் தன்னுடைய கல்லூரி காதல் நினைவுகளை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது, அவர் கல்லூரி படிக்கும்போது மூன்று வருடம் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்ல் இருந்ததாகவும், அதுவும் காலேஜ் கேண்டீனில் ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொள்வதுடன் சரிதான். மேலும் கண்ணாலே இருவரும் பேசிக் கொள்வார்களாம்.
மேலும், அவர் அவரது காதலர் ஆறு மணிக்கு போன் செய்கிறேன் என்று சொன்னால், அவரது போன் காலுக்காக சாக்ஷி 8 மணி வரைக்கும் காத்து இருப்பாராம். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. தொடர்ந்து அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,
என் குடும்பத்திற்கும் என்னைப்பற்றி தெரியும். என் குடும்பம் என்னை நம்புகிறது, எந்த அளவுக்கு ஒருவருடன் பழகுவேன் என்பது என் குடும்பத்தினருக்கு தெரியும் எனவும் சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.
0
0