“கல்யாணம் பத்தி தெரியல…! ஆனா சிம்புவோட படத்துல கண்டிப்பா நடிப்பேன்” – சிம்புவின் லேட்டஸ்ட் Girl Friend…!

14 February 2020, 1:00 pm
Quick Share

“அன்னக்கொடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுபிக்ஷ்ஷா. சமீபத்தில் இவரும் நடிகர் சிம்புவும் இணைந்து சுற்றுவதை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். சிம்புவிற்கு வயதாகிக்கொண்டே செல்கிறது. அதனால் அவர்களின் வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். அந்த பெண் தான் இவர் என்ற செய்திகள் வெளியாகிவந்தன.


அதற்கு பதிலாக சுபிக்ஷ்ஷா “நானும் சிம்புவும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் திருமணம் என்ற பேச்சு ஒன்றும் தற்போது இல்லை. தேவையில்லாமல் எங்களை விமர்சித்து வருகின்றனர். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களின் வீட்டில் இதுப்பற்றி இன்னும் யாரும் பேசவில்லை. என்னுடைய சினிமா வாழ்க்கை இப்போது தான் ஆரம்பித்துள்ளது.” என்றார்


மேலும் அவர் “கல்யாணம் பத்தி தெரியல…! ஆனா சிம்புவோட படத்துல கண்டிப்பா நடிப்பேன்” என்றுப்பேசி முடித்தார். தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் ஜமீல் இயக்கும் “மஹா” படத்தில் நடிகை ஹன்சிகா வுடனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் “மாநாடு” படத்தில் கல்யாணி ப்ரியதர்சனுடனும் நடித்து வருகின்றார்.