கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார். இவரின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் இவரை உயர்த்தியது.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷு நடித்த அனைத்து படங்களும், இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தது. இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தார். இதனையடுத்து, விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு உச்ச நடிகையாக பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி கடைசியாக நானிக்கு ஜோடியாக நடித்த தசரா படத்தில் வெண்ணிலாவாக ஒரு கலக்கு கலக்கி இருப்பார். இதனிடையே, கிசுகிசுக்கு பஞ்சம் இல்லாமல் இல்லாமல் கோலிவுட்டில் இவர் முணுமுணுக்கப்பட்டார்.
மேலும், பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுடன் விஜய் நெருக்கமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தநிலையில் இவரது தாய் வீடியோ வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், தற்போது தனது நெருங்கிய நண்பன் ஃபர்ஹான் பின் லியாகத்தை கட்டியணைத்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
ஃபர்ஹான் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர் கீர்த்தி சுரேஷின் நீண்டநாள் நெருங்கிய நண்பர். அண்மையில் கூட கீர்த்தி சுரேஷ் தனது நண்பர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்றும் அவரைத்தான் காதலித்து திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக கிசு கிசுக்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அந்த நபர் தான் இவரா? என எல்லோரும் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த புகைப்படம் வைரலானதை கவனித்த கீர்த்தி சுரேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் புகைப்படத்தில் இருப்பவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் அவர் தனது வருங்கால கணவர் இல்லை என்றும் தெளிவாக கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய வாழ்க்கை துணை பற்றிய தகவலை தானே கூறுவேன், அதுவரை பொறுமையாக இருங்க என கீர்த்தி சுரேஷ் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷூக்கு உண்மையில் திருமணம் நடைபெறவுள்ளதா என அவரின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், கீர்த்தி சுரேஷும், பர்ஹானும் நல்ல நண்பர்கள் என்றும், பர்ஹான் தங்கள் குடும்பத்தில் ஒரு நல்ல நண்பராக இருப்பதாகவும், தாங்கள் வளைகுடா நாடுகளில் பயணம் செய்யும்போது பலமுறை தங்களுடன் வந்துள்ளார் என்றும், திருமணம் குறித்து பரவும் தவறான செய்தி தங்களையும், பர்ஹான் குடும்பத்தையும் பாதிப்பதாகவும், இனி இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்பவேண்டாம் என்றும், இதனால் இரு குடும்பத்தினனரும் மன உளைச்சலில் இருப்பதாகவும், சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.