செருப்பாலையே அடிப்பேன்… சூப்பர் ஸ்டாரை திட்டிய பிரபல இயக்குநர் : உடனே ரஜினி செய்த செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2022, 5:10 pm
Rajini - Updatenews360
Quick Share

சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. அந்த இடத்துக்கு வர தகுதி நிச்சயம் தேவை என்பதை வளர்ந்து வரும் தமிழ் சினிமா நடிகர்கள், மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் ரஜினிகாந்த்.

ஸ்டைல், நடிப்பு, சண்டை என தன்னுடைய திறமையை மிளிர வைத்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றவர். இந்த நிலையில் மது அருந்தும் பழக்கத்தை கைவிட்டதை பற்றி அவரே ஒரு வீடியோவில் விளக்கியுள்ளார்.

இயக்குநர் பாலச்சந்தரின் எண்ணற்ற படத்தில் நடித்துள்ளர் ரஜினி, கமல். இயக்குநர் பாலச்சந்தர் ஒரு படத்தை ரஜினியை வைத்து முடித்துவிட்டார்.

அப்போது ரஜினி படத்தை முடித்து விட்டு, வழக்கம் போல வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டிற்கு சென்றதும், பாலச்சந்தரிடம் இருந்து போன் கால் வந்தது.

அவர், ஒரு காட்சி மிஸ் ஆகிவிட்டது, தெரியாமல் பேக்அப் சொல்லிவிட்டோம். மீண்டும் படமாக்கப்பட வேண்டாம், உடனே கிளம்பி வா என கூறினார். ரஜினி அப்போது மது அருந்தியதால், எப்படி மறுபடியும் செல்வது என, குளித்து, பேஸ்ட் எடுத்து பல் துலக்கிவிட்டு, வாசனை திரவியம் அடித்துவிட்டு கிளம்பி சென்றுள்ளார்.

அவருடன் கிட்ட செல்வதை தவிர்க்க வேண்டும் என முயற்சி செய்தார்,. ஆனால் அதற்குள் அவர் கண்டுபிடித்து, தனது அறைக்கு ரஜினியை வரவழைத்து நாகேஷ் தெரியுமா என கேட்டார். அவர் தெரியும் என கூற, அவன் எப்பேர்பட்ட நடிகன் தெரியுமா? அவன் முன்னாடி நீயெல்லாம் இரும்புக்கு கூட சமம் இல்ல.. அவன் தண்ணி அடிச்சே வாழ்க்கையை கெடுத்துக்கிட்டான். இனிமே சூட்டிங்கில் நீ தண்ணி போட்டு வந்த, நான் கேள்விப்பட்ட செருப்பாலையே அடிப்பேன் என கூறிவிட்டார்.

அதில் இருந்து மது அருந்தும் பழக்கத்தை விட்டார் ரஜினி. மேலும், காஷ்மீர், ஜம்மு அங்க இங்க எங்க குளிர் அடித்தாலும் மதுவை உபயோகித்ததே இல்லை என ஒரு வீடியோ ரஜினியே கூறியுள்ளார்.

Views: - 1002

33

15