“பாலாவை கொலை பண்ணி இருப்பேன்” – கொலைவெறியில் பிரபல நடிகை போட்ட பதிவு !

9 November 2020, 11:55 am
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இது எப்படி என்று ரசிகர்கள் யோசித்து முடிப்பதற்குள் நேற்றைய நிகழ்ச்சி முடிந்துவிட்டது.

இந்நிலையில் “சனம் Miss South India அழகி போட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் வென்றார்” என்று பாலா மோசமான கமெண்ட் அடித்தார் என்று சனம் ஒரு மிகப்பெரிய குற்றசாட்டை முன்வைத்தார். ஆனால் கமல் இதை பற்றி எதுவும் கேட்கவில்லை.

நடிகையுமான கஸ்தூரி இது பற்றி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறும்போது “சனம் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு பின் இருக்கும் உண்மை எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது. இவரும் ஒரு மாடலாக இருந்து கொண்டு, இன்னொரு பெண்ணை பார்த்து அப்படிக் கூறுவது எந்த வகையில் நியாயம். பாலா என்ன அரிச்சந்திரனுக்கு பேரனா? ஏன் அவர் பொய் சொல்ல மாட்டாரா? ஏற்கனவே தனது தாய் விஷயத்தில் அவர் பொய் சொல்லி இருக்கிறாரே. மேலும் என்னிடம் அப்படி அவர் கூறியிருந்தால், ஒரு கொலை விழுந்திருக்கும்” என்று ஆவேசத்துடன் யூடியூப்பில் கூறி இருக்கிறார்.

Views: - 21

0

0