என் அம்மா விஜய் சாரைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!

Author: Udayaraman
7 January 2021, 8:31 pm
Quick Share

மாஸ்டர் படப்பிடிப்பின் போது தனது அம்மாவுடன் தளபதி விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக விஜய் சேதுபதி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தணு, ஆண்ட்ரியா ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்களுடன் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி மாஸ்டர் படம் பிரமாண்டமாக வெளியாகிறது
இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு, மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது தனது அம்மா விஜய்யை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார். இது குறித்து விஜய் சேதுபதி மேற்கொண்டு கூறுகையில், என் அம்மா விஜய் சாரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாங்க. எனக்கே அது ஆச்சரியமாகத்தான் இருந்தது. மாஸ்டர் படப்பிடிப்பிற்கு என் அம்மாவை கூட்டி வந்து விஜய் உடன் போட்டோ எடுக்க வைத்தேன். என் பையன் ஒழுங்கா வேலை பார்க்கிறானா? என்று எனது அம்மா கேட்டாங்க.

அதற்கு, விஜய்யோ, அவங்க மனசு குளிரும் அளவிற்கு பேசிவிட்டார். விஜய் சார் ரொம்ப நன்றி சார் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தில் பவானியாக வரும் விஜய் சேதுபதி தான் விஜய்க்கு வில்லன். ஆனால் கடவுள் மீது பயபக்தி கொண்ட மனிதர். விஜய் தான் ஹீரோ என்றாலும், அவர் பண்ணும் அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல, ஆமாம், கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினாலும், மது அருந்திட்டு வந்து அடாவடி பண்ணும் ஒரு ஹீரோ. இதன் மூலம் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்படவே கல்லூரியை விட்டு நீக்கப்படுகிறார்.

அதன் பிறகு குழந்தைகளை பாதுகாக்கும் ஹாஸ்டலில் வேலைக்கு சேருகிறார். அங்கு, குழந்தைகள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கண்டு ஆதங்கப்படுகிறார். அதன் பிறகு போதைப் பொருள் யார் சப்ளை செய்வது என்று கண்டறிந்து அவர்களுடன் சண்டையிடுகிறார். இது தான் படத்தின் கதை என்று அண்மையில் சமூக வலைதளங்களில் தகவல் சுற்றி சுற்றி வந்தது.
படத்தின் கிளைமேக்ஸில் நெய்வேலியில், நடந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 91

0

0