சமந்தாவை நேரில் பார்த்தால் கட்டி அணைச்சிக்குவேன்.. சோபிதாவை வெறுப்பேற்றும் நாக சைதன்யா!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2024, 5:45 pm

சினிமா ஜோடிகள் காதலித்து திருமணம் செய்வது இயல்பான நிலைக்கு வந்துவிட்டது. காரணம் அந்த திருமணம் கடைசி வரை நிலைத்து நிற்குமா என்பது கேள்விக்குறிதான்.

அப்படித்தான் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த சமந்தா – நாகசைதன்யா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் நாகர்ஜூனா குடும்பம் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனால் சமந்தான் தான் கொள்கையில் இருந்து கொஞ்சம் கூட மாறாமல் இருந்தார். இருவருக்கும் கோவாவில் திருமணம் கோலாகலமாக நடந்தது. ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இந்த திருமணம் விவாகரத்துக்கு போனது.

திருமணத்திற்கு பிறகு தொடாந்து சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தியது தான் காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் பரஸ்பரமாக பிரிந்து அவர்கள் கேரியரில் கவனம் செலுத்துகின்றனர்.

சமந்தாவும் விவாகரத்துக்கு பிறகு கவர்ச்சி நடனத்துக்கு பச்சைக் கொடி காட்டி ஊ சொல்றியா பாட்டால் மீண்டும் ட்ரெண்டிங் ஆனார். நாக சைதன்யாவோ ஷோபிதா துலிபாலாவுடன் நட்புறவை ஏற்படுத்தி வெளிநாடுகளுக்கு பறந்து வந்தனர்.

இது குறித்து சமூக வலைதளங்களில் போட்டோக்கள் வைரலாகியது. இதையடுத்துதான் இருவரும் காதலித்து வருவது தெரியவந்தது. இதற்கு நாகர்ஜூனா குடும்பமும் ஓகே சொல்லி சமீபத்தில் நிச்சயதார்த்தமும் முடிந்தது.

இது குறித்து பேசிய நாகர்ஜூனா, நாக சைதன்யாவுக்கு இது மகிழ்ச்சிகரமாக இருக்கும், அவரை நான் மீட்டு வந்துள்ளேன் என கூறினார்.

இதனிடையே நாக சைதன்யா பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இப்போது நீங்கள் சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது. உடனே அவருக்கு ஒரு ஹாய் சொல்லி, கட்டிபிடித்துக்கொள்வேன் என சைதன்யா கூறியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 145

    0

    0