பேனர் வைக்கும்போது ரசிகர்கள் இறந்தால், சினிமாவுக்கு தடை செய்யலாமா? சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி !

14 September 2020, 12:45 pm
Quick Share

நேற்று தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் தொடர்ந்து மூன்று மாண, மாணவிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேர்வெழுதப்‌ போகும்‌ மாணவர்களுக்கு ‘வாழ்த்து’ சொல்வதற்குப் பதிலாக ‘ஆறுதல்‌’ சொல்வதைப் போல அவலம்‌ எதுவுமில்லை, நீட் தேர்வு இனி நடக்க கூடாது” என்று உருக்கமான அறிக்கையை
வெளியிட்டு இருந்தார்.

அதை தட்டி கேட்க்கும் வகையில் பாஜக பிரபலம் மற்றும் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் தனது சூர்யா மீது விமர்சனம் வைத்துள்ளார். “நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் தங்களுடைய சொந்த பணத்தில் பேனர்கள் வைக்கின்றனர். அப்படி பேனர்கள் வைக்கும் போது தவறி விழுந்து ஒரு சில ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் சினிமாவையே தடை செய்யலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், மாணவர்களை நேர்மையாக, தைரியமாக தேர்வு எழுதச் சொல்லுங்கள். அப்படி பார்க்கும்போது நோயாளிகளை பரிசோதனை செய்யும் எல்லா மருத்துவர்களுக்கு தினமும் ஒரு பரிட்சைதான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0