குழந்தை பிறந்துடுச்சு…. புகைப்படத்துடன் மகழ்ச்சியான செய்தி சொன்ன இலியானா – குவியும் வாழ்த்துக்கள்!

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருந்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

இலியானா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் வாய் திறக்காமல் இருந்து வருகிறார். இதனிடையே செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் என்பவருடன் ரகசியமாக டேட்டிங் செய்துவந்தார். அவ்வப்போது இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டது. அந்த நபர் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃபின் சகோதரர்.

காதலை வெளிப்படுத்துவதற்கு முன்னரே இலியானா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். இதனால் இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்ற கேள்வி எழுந்து பரபரப்பாக பேசப்பட்டது. அவ்வப்போது தனது கர்ப்பமான போட்டோக்களை வெளியிட்டு வந்த இலியானாவுக்கு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தற்போது மகனின் புகைப்படத்துடன் வெளியிட்டு “எங்கள் அன்பான பையனை உலகிற்கு வரவேற்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது. எங்கள் இதயம் முழுமையாக நிறைந்துவிட்டது என அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவரது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறார்.

Ramya Shree

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

10 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

10 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

11 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

12 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

12 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

12 hours ago

This website uses cookies.